WELCOME to Information++

Wednesday, January 26, 2022

How to Apply Nativity certificate?


 நம்மில் பலர் இருப்பிட சான்றிதலுக்கும், பிறப்பிட சான்றிதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கின்றோம். இருப்பிடச் சான்றிதழ் (Nativity certificate) என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதை காட்டும் சான்றிதழ் ஆகும்.


ஆனால் பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார் அவர் பிறக்கும்போது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களை தரும் சான்றிதழ் ஆகும்.

பொதுவாக இருப்பிட சான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தேவையற்றது. ஆனால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும்போது இருப்பிட சான்றிதழையும் வாங்குகின்றனர்.

குடும்ப அட்டையே ஒரு இருப்பிட சான்றிதழ் தான். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால் தனியாக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

சரி வாங்க ஆன்லைனில் மிக எளிமையான முறையில் இருப்பிட சான்றிதழ் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

Nativity certificate online apply:-

இந்த இருப்பிடம் சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.

அதற்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அவற்றில் Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது ஒரு திரை திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.

பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஒரு otp எண் அனுப்பப்படும். அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Registration ஆகிவிடும்.

இப்பொழுது Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.

பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.

பின்பு Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அவற்றை Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் Revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும். அவற்றில் Nativity certificate என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது ஒரு விண்டோ திறக்கப்படும் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது ஒரு திரை ஓபன் ஆகும். அவற்றில் can நம்பர் பதிவு செய்ய வேண்டும். அதாவது தங்களுடைய தொலைபேசி எண்ணை அவற்றில் டைப் செய்ய வேண்டும். தொலைபேசி எண் தந்த பிறகு, Generate the OTP என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது தங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அவற்றை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்யுங்கள்.

பின்பு Confirm OTP என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய OTP எண் certificate செய்யப்படும். certificate ஆகியதும் processd என்பதை திரும்பவும் ஒருமுறை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது ஒரு திரை ஓபன் ஆகும். அவற்றில் Nativity by birth, Nativity by Residence என்ற இரண்டு ஆப்சன் காட்டப்படும். அவற்றில் Nativity by Residence என்பதை கிளிக் செய்யுங்கள். பின்பு submit என்பதை கிளிக் செய்யுங்கள்.

பின் list of documents என்ற page திறக்கப்படும். அவற்றில் சில வகையான documents-ஐ upload செய்ய வேண்டும்.

அதாவது தங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.

இவ்வாறு ஆன்லைன் மூலம் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த குறிகிய நாட்களுக்குள் இருப்பிட சான்றிதழை பெற்று கொள்ளலாம். 

Know your PAN Card

ஆதார் அட்டை நமது அடையாளத்தை வெளிப்படுத்தும் விதம், நிதிப் பணிகளுக்கு பான் கார்டு பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டை மூலம், எந்தவொரு நபரின் நிதி நிலை, அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைக் கண்டறிய முடியும். இந்த அட்டை வரியை நிரப்ப பயன்படுகிறது. வங்கிகள், வேலைகள், தபால் அலுவலகங்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பான் கார்டு தேவைப்படுகிறது. பான் கார்டின் முழு வடிவம் பான்: நிரந்தர கணக்கு எண். ஒருவரின் பான் கார்டு தயாரிக்கப்பட்டு விட்டால், அவரது பான் கார்டை மீண்டும் உருவாக்க முடியாது, ஏனெனில் கார்டில் உள்ள எண்ணை மாற்ற முடியாது. இந்த எண்ணில் வருமான வரித்துறைக்கு தேவையான நபரின் அனைத்து தகவல்களும் உள்ளன. இது 10 இலக்க எண். இந்த எண்ணின் உதவியுடன், நபரின் அனைத்து தகவல்களையும் எடுக்க முடியும். உங்களிடம் பான் கார்டு இருந்தால், உங்கள் கார்டைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்-

ஒவ்வொரு எண்ணுக்கும் எழுத்துக்கும் அதன் சொந்த சிறப்பு அர்த்தம் உண்டு
உங்கள் பான் கார்டில் முதல் 3 எழுத்துக்கள் அகர வரிசையாக உள்ளதா என சரிபார்க்கவும்.

இந்த எழுத்துக்கள் AAA இலிருந்து ZZZ வரை இருக்கலாம்.

இந்த மூன்று கடிதங்கள் என்னவாக இருக்கும் என்பதை வருமான வரித்துறை முடிவு செய்கிறது.

அட்டையின் நான்காவது எழுத்தும் அகரவரிசையில் உள்ளது, இது அட்டை வைத்திருப்பவரின் நிலையைக் கூறுகிறது.

அட்டையின் ஐந்தாவது எழுத்து அட்டை வைத்திருப்பவரின் குடும்பப் பெயரைக் குறிக்கிறது.

உங்கள் கார்டில் 4 இலக்க எண்ணும் எழுதப்பட்டுள்ளது.
இது 0001 முதல் 9999 வரை எந்த எண்ணாகவும் இருக்கலாம்.

இந்த எண் தற்போது வருமான வரித்துறையில் இயங்கும் எண்ணைக் காட்டுகிறது.
முடிவில் ஒரு அகரவரிசை எழுத்து உள்ளது, அது எதுவாகவும் இருக்கலாம்.

இந்த எழுத்துக்கள் என்ன அர்த்தம்
P ஒரு நபருக்கு
C நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
H உங்கள் மதத்தைக் குறிக்கிறது அட்டையில் H இருந்தால் நீங்கள் இந்து.
A மக்கள் குழுவைக் குறிக்கிறது.
B நபரின் உடலைக் குறிக்கிறது.
G அரசாங்க நிறுவனத்திற்கு அறிக்கைகள்.
J செயற்கை என்பது நீதித்துறை நபரைக் குறிக்கிறது.
L உள்ளூர்வாசியாக இருப்பதைக் குறிக்கிறது, அதாவது நீங்கள் உள்ளூர்வாசி.
F உங்கள் நிறுவனத்தைச் சொல்கிறது.
T நம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது

 

Address Correction in Aadhar Card

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாற்றம் மற்றும் திருத்தம் செய்து கொள்ளும் வகையில் அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரில் திருத்தம்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரத்யேகமான அடையாள அட்டையாக ஆதார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையானது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். அதாவது ஆதாரில் உள்ள விபரங்கள் ஏதேனும் தவறுதலாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வசதிகளை மக்களின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆதாரில் முகவரியில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை மாற்றுவது அல்லது திருத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதாரில் முகவரி மாற்றம் & திருத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகள்;

1. முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற ஆதார் சேவையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் உங்களுடைய ஆதார் எண் மற்றும் Captcha குறியீடு கொடுக்க வேண்டும். பின்னர் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

3. பின்னர் தோன்றும் பக்கத்தில் Aadhaar Update என்பதை தேர்வு செய்து முகவரியை மாற்றி அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளலாம். இந்த செயலை மேற்கொள்வதற்கு ஆதார் தளத்தில் கூறப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

நேரில் சென்று அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையம் மூலம் மாற்றம் & திருத்தம் செய்வதற்கான வழிமுறை:

1. முதலில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியவில்லை என்றால் https://appointments.uidai.gov.in/easearch.aspx... என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது Pincode உள்ளிட்டு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை தெரிந்து கொள்ளலாம்.

2. பின்னர் அந்த மையத்திற்கு நேரில் சென்று முகவரி மாற்றம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் சேவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து ஆதார் திருத்தம் அல்லது மாற்றம் செய்துகொள்ளலாம்.

தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்
 

Removing Name in Ration Card


 அனைத்து இந்தியக் குடிமக்களும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியம். வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு, வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு பிங்க் ரேஷன் கார்டு என்று வகைப்படுத்தி வழங்கப்படுகின்றன.


ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்டெப் 1
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும் (மாநிலத்துக்கு மாநிலம் இணையதள முகவரி மாறும்).

ஸ்டெப் 2
வலைதளத்தில் `பயனாளர் நுழைவு' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3

பிறகு, ரேஷன் கார்டில் எந்தத் தொலைபேசி எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை, அங்குள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யவும். அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4

பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, `பதிவு செய்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 5

குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர்/ சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா என்பதன் விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டெப் 6

பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்' என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு `புதிய கோரிக்கை' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 7

குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்கப்பட்ட பின், 'சேவையை தேர்வு செய்யவும்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 8

கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் 'குடும்ப உறுப்பினர் நீக்க' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 9

குறிப்பிட்ட நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்பதன் காரணத்தைக் குறிப்பிடவும்.

ஸ்டெப் 10

திருமணமாகிச் சென்ற மகள், உயிரிழந்த அப்பா என, குடும்ப உறுப்பினரின் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான `ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்' என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணமாக, மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவர் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமென்றால், அவரது திருமணச் சான்றிதழ் அவசியம். `திருமணச் சான்றிதழ்' என்பதை தேர்வு செய்த பிறகு, choose file என்பதை க்ளிக் செய்து, திருமண சான்றிதழை அப்லோடு செய்யவும். போட்டோ 1 MB அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெப் 11

`உறுதிப்படுத்துதல்' என்பதை டிக் செய்து, `பதிவு செய்ய' என்பதை க்ளிக் செய்யவும். பிறகு 2, 3 நாள்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். நீக்கம் ஆனதை இணையதளம் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.

நன்றி:- விகடன்

How to Apply for Ration Card ?


 ஒரு குடிமகனுக்கு அத்தியாவசியமான அடிப்படை அடையாள அட்டைகளைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை, அதன் தேவை ஏற்படும்வரை நாம் அறிந்துகொள்வதில்லை. அப்படியே தேவை ஏற்படும்போதும், அந்த நடைமுறைகளில் நமக்கு ஒருவித தடுமாற்றம் ஏற்படுகிறது. அது தேவையேயில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் அதற்கான நடைமுறைகள் எல்லாம் மிகவும் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன.


விண்ணப்பிக்கும் முன்..!

ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, உங்களது பெயரை ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். எனவே, முதலில் உங்களது பெயரை பழைய ரேஷன் கார்டிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பார்த்துவிடலாம்.

`புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி?’ - புதிதாகத் திருமணமானவர்கள் மத்தியில் இந்தக் கேள்வி பிரதானமானதாக இருக்கும். முன்பு இருந்ததைப்போல, ரேஷன் கார்டு பெறுவது இப்போது கடினமான விஷயம் இல்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டைப் பெற்று விடலாம். புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பது, பழைய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குவது ஆகியவை குறித்த நடைமுறைகளைப் பார்க்கலாம்.

புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பது எப்படி?

www.tnpds.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, `மின்னணு அட்டை சேவைகள்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில், `மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். குடும்பத் தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் அல்லது வட்டம், எந்தக் கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கோரப்பட்டிருக்கும். அவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்.

`குடும்பத் தலைவர் புகைப்படம்’ என்ற இடத்தில், உங்களின் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை jpeg, jpg, png ஆகிய ஏதாவது ஒரு ஃபார்மேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் அதிகபட்சம் 5MB-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ரேஷன் கார்டு விண்ணப்பம்ரேஷன் கார்டு விண்ணப்பம்
குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, `உறுப்பினரைச் சேர்க்க' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஓப்பன் ஆகும் பக்கத்தில் முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

தொடர்ந்து, கீழே குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் (முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களைச் சேர்க்கவும்) என்ற குறிப்புக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் `உறுப்பினர்களைச் சேர்க்க’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பிறகு, ஓப்பன் ஆகும் பக்கத்தில் குடும்பத் தலைவரின் பிறந்த தேதி, தொழில், மாத வருமானம், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்யவும்.

`மற்ற ஆவணங்கள்’ என்ற இடத்தில் குடும்பத் தலைவருடைய ஆதார் அட்டையின் இருபுறத்தையும் ஸ்கேன் செய்து (இருபுறமும் ஒரே பக்கத்தில் அருகருகில் இருப்பதைப் போல இருக்க வேண்டும்) பதிவேற்ற வேண்டும். அளவு 1MB-க்குள்ளாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக `அட்டைத் தேர்வு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். தொடர்ந்து பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, மற்றவை என நான்கு வகையான அட்டைகள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு எந்த வகை ரேஷன் அட்டை வேண்டுமோ அந்த அட்டையைத் தேர்வு செய்துகொள்ளவும்.

தற்போது குடும்பத் தலைவரின் விவரங்கள் அனைத்தும் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகு, `உறுப்பினர் விவரம் சேமி’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். தொடர்ந்து குடும்பத் தலைவரின் பெயர் மட்டும் ஓர் அட்டவணைக்குள் காட்டப்படும். அதன் மேலே உள்ள `உறுப்பினரைச் சேர்க்க’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, குடும்பத் தலைவரை சேர்த்ததுபோலவே நீங்கள் சேர்க்க வேண்டிய உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

`குடியிருப்புச் சான்று' எனக் கோரப்பட்டிருக்கும் இடத்தில் ஆதார் அட்டை, மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்கம், எரிவாயு நுகர்வேர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் நீங்கள் சமர்ப்பிக்கும் வகையிலான ஏதாவதொரு சான்றைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதையடுத்து, நீங்கள் தேர்வுசெய்த ஆவணத்தின் நகலைப் பதிவேற்ற வேண்டும். அந்த ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மேட்டிலும் இருத்தல் வேண்டும்.

அடுத்தபடியாக உங்களின் எரிவாயு இணைப்பு விவரங்களைப் பதிவு செய்யவும். அதைத் தொடர்ந்து, `உறுதிப்படுத்துதல்’ என்ற ஆப்ஷனை டிக் செய்யவும். அதையடுத்து, `பதிவு செய்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவு செய்துகொள்ளவும். அதையடுத்து, `உங்களது கோரிக்கை வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது' என்ற அறிவிப்புடன் உங்களுக்கான குறிப்பு எண் திரையில் தோன்றும். உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க அந்த எண் அவசியம் என்பதால் அதைக் கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓரிரு தினங்கள் கழித்து, உங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிய www.tnpds.gov.in இணையதளத்துக்குச் சென்று மின்னணு அட்டை சேவைகள் என்ற இடத்தில், `மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்பதை க்ளிக் செய்யவும். அதைத் தொடர்ந்து ஓப்பன் ஆகும் புதிய பக்கத்தில் உங்களின் குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து `பதிவு செய்ய’ என்பதை க்ளிக் செய்யவும்.

அதையடுத்து ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தொடர்பான `கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, கோரிக்கை அனுமதிக்கப்பட்டது’ என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் எதில் பச்சை வண்ணத்தில் டிக் மார்க்குடன் இருக்கிறதோ அதுதான் உங்கள் விண்ணப்பத்தின் நிலை. வலதுபுறத்தில் நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை டௌன்லோடு செய்துகொள்ளலாம்.

உங்களது கோரிக்கை அனுமதிக்கப்பட்ட பிறகு, நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகளில் ஒன்றாக உங்களுடைய வீட்டுக்கே விசாரணைக்கு வரலாம். அப்போது உங்கள் பெயர் பழைய ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டதற்கான சான்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தவிர, நீங்கள் குறிப்பிட்டிருக்க விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு பதிவு எண் அனுப்பப்படும். வட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்களுடைய புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967 or 1800-425-5901) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

#RationCard #NewCard #TNPDS

How to get Marriage Certificate ?

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துகொள்வது 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, திருமணப் பதிவு குறித்த நடைமுறைகளைப் பார்க்கலாம்...

`தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009'-ன்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கும் திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதால், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யத் தவறக் கூடாது.

திருமணப் பதிவு குறித்து ஏற்கெனவே ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவாறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் திருமணங்கள் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவானது விருப்பத்தின் அடிப்படையில் இருந்ததை, தற்போதைய 2009-ம் ஆண்டு சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

திருமணம் பதிவு செய்யும் முறை:-

திருமணம் முடிந்த தம்பதியர் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில், `பதிவு செய்தல்' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, பயனர் பதிவை (அக்கவுன்ட்) உருவாக்க வேண்டும். பின்னர், `திருமணப் பதிவு' என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைக்க வேண்டும்.

விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து, சில மணி நேரத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.


திருமணப் பதிவு சந்தேகங்களுக்கு...

1800 102 5174
சந்தேகங்களுக்கு என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் (அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்).
எந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம்?
திருமணம் நடந்து 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைக் கடந்துவிட்டால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் மதச்சட்டத்தின்படி உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினால், இந்துக்கள் எனில், இந்து திருமணச் சட்டத்தின் கீழும், கிறிஸ்துவர்கள் எனில், கிறிஸ்துவ திருமணச் சட்டத்தின் கீழும், இஸ்லாமியர்கள் எனில், இஸ்லாமிய திருமணச் சட்டத்தின்படியும் பதிவு செய்துகொள்ள முடியும். இதைத் தவிர்த்து சிறப்பு திருமணப் பதிவுச் சட்டம் என்ற ஒன்றும் இருக்கிறது. இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அதைச் சிறப்பு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், சாதி, மதம் உள்ளிட்ட எந்தவொரு சமூகப் பிரிவுகளையும் பொருட்படுத்தாமல், சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி திருமணம் செய்துகொள்கிறவர்களும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்
ஆன்லைன் விண்ணப்பம்,

திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ்,

கோயில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது),

முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை,

குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,

வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,

சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை,

மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.

திருமணச் சான்று தொலைந்தால் என்ன செய்வது?

2016-ம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்தவர்களின் திருமண சான்றுகள் அனைத்துமே இணையத்தில் உள்ளன. எனவே, எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதி சார்பதிவாளரிடம் கையொப்பம் பெற்று, அசல் சான்றிதழாக மாற்றிக்கொள்ளலாம். 2016-ம் ஆண்டுக்கு முன் திருமணத்தைப் பதிவு செய்தவர்கள் எனில், இதற்கு முன் உங்கள் திருமணத்தை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் உரிய ஆவணங்களுடன் மனுக்கொடுத்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

சட்டத்திருத்தம்!

திருமணம் எந்த இடத்தில் நடந்ததோ அந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட அலுவலகத்தில் மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டுள்ளது. எனவே திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவு அலுவலகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவு அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவை மேற்கொள்ளலாம்.

கட்டாய திருமணப் பதிவு சட்டத்துக்கு முன்னதாகத் திருமணம் செய்து, இதுவரையில் பதிவு செய்யாமலிருப்பவர்களும் திருமணப் பதிவை மேற்கொள்ளலாம். இதற்கென உரிய கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி:- விகடன்
 

How to Apply Nativity certificate?

  நம்மில் பலர் இருப்பிட சான்றிதலுக்கும், பிறப்பிட சான்றிதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கின்றோம். இருப்பிடச் சான்றித...