WELCOME to Information++

Wednesday, January 26, 2022

Address Correction in Aadhar Card

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாற்றம் மற்றும் திருத்தம் செய்து கொள்ளும் வகையில் அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரில் திருத்தம்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரத்யேகமான அடையாள அட்டையாக ஆதார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையானது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். அதாவது ஆதாரில் உள்ள விபரங்கள் ஏதேனும் தவறுதலாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வசதிகளை மக்களின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆதாரில் முகவரியில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை மாற்றுவது அல்லது திருத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதாரில் முகவரி மாற்றம் & திருத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகள்;

1. முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற ஆதார் சேவையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் உங்களுடைய ஆதார் எண் மற்றும் Captcha குறியீடு கொடுக்க வேண்டும். பின்னர் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

3. பின்னர் தோன்றும் பக்கத்தில் Aadhaar Update என்பதை தேர்வு செய்து முகவரியை மாற்றி அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளலாம். இந்த செயலை மேற்கொள்வதற்கு ஆதார் தளத்தில் கூறப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

நேரில் சென்று அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையம் மூலம் மாற்றம் & திருத்தம் செய்வதற்கான வழிமுறை:

1. முதலில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியவில்லை என்றால் https://appointments.uidai.gov.in/easearch.aspx... என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது Pincode உள்ளிட்டு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை தெரிந்து கொள்ளலாம்.

2. பின்னர் அந்த மையத்திற்கு நேரில் சென்று முகவரி மாற்றம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் சேவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து ஆதார் திருத்தம் அல்லது மாற்றம் செய்துகொள்ளலாம்.

தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்
 

No comments:

Post a Comment

How to Apply Nativity certificate?

  நம்மில் பலர் இருப்பிட சான்றிதலுக்கும், பிறப்பிட சான்றிதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கின்றோம். இருப்பிடச் சான்றித...