5 நிமிட கட்லெட்......
* வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் ஒரு நறுக்கிய வெங்காயம், ஒரு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
* பிறகு இதில் நறுக்கிய ஒரு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன், வேக வைத்து மசித்த 2 உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.
* ஓரங்களை நீக்கிய கோதுமை பிரெட் ஸ்லைஸ் 6 எடுத்துக்கொள்ளவும். அவற்றைத் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும்.
* பின்னர் ஒவ்வொரு பிரெட் உருண்டைக்குள்ளும் ஒரு மசாலா உருண்டையை நடுவில் வைத்து சிறிய பந்தாக உருட்டிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருட்டிவைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்...
#வீட்டுசமையல்
No comments:
Post a Comment