WELCOME to Information++

Tuesday, September 9, 2025

இட்லி மாவு சுய்யம்


இட்லி மாவு சுய்யம்

தேவையானவை:

இட்லி மாவு (புளிக்காமல் இருக்க வேண்டும்) - ஒரு கப், கடலைப்பருப்பு - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - அரை, மூடியைத் துருவிக்கொள்ளவும், ஏலக்காய், சுக்குப்பொடி - தலா அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 200 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து முக்கால் பதம் வேகவைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். முக்கால் பதம் வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பின்னர் இக்கலவையை உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இட்லி மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை இட்லி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...