சமையல் குறிப்புகள்......
தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.
உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது.
இவற்றை வேகவைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.....
#வீட்டுசமையல்
No comments:
Post a Comment