WELCOME to Information++

Wednesday, September 10, 2025

காலிஃப்ளவர் போண்டா செய்வது எப்படி....


காலிஃப்ளவர் போண்டா செய்வது எப்படி....
            
தேவையான பொருட்கள்
            
 பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், கடலை மாவு - தலா ஒரு கப், 
சோள மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன், 
மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், 
வாழைக்காய் - 1, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
            
 செய்முறை
            
           

 * முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 
* வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். 
*  அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
* உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.இப்போது சுவையான காலிஃப்ளவர் போண்டா தயார்.

#sivakarthikasamayal

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...