WELCOME to Information++

Tuesday, September 9, 2025

புதுமையான முறையில் வெஜிடபிள் பிரியாணி


🔥😱வீடே மணக்கும் புதுமையான முறையில் வெஜிடபிள் பிரியாணி ❤️ இதுபோல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் 😋😱 

❤️தேவையான பொருட்கள் 

🌟பாஸ்மதி அரிசி முக்கால் கப் சீரக சம்பா 🌟அரிசி முக்கால் கப்
 🌟எண்ணெய் 4 டீஸ்பூன் 
🌟நெய் ஒரு டீஸ்பூன்
 🌟வெங்காயம் ஒன்று 
🌟தக்காளி ஒன்று
🌟 இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன்   
 🌟பச்சை மிளகாய் ஐந்து 
🌟கருவேப்பிலை ஒரு கொத்து 
🌟பட்டை இரண்டு
🌟 ஏலக்காய் 2 
🌟நட்சத்திர சோம்பு இரண்டு 
🌟மராட்டி மொக்கு ஒன்று 
🌟கல்பாசி சிறிது 
🌟ஜாதிப்பத்திரி 2 
🌟சோம்பு அரை டீஸ்பூன் 
🌟சீரகம் அரை டீஸ்பூன் 
🌟கஸ்தூரி மேத்தி ஒரு டீஸ்பூன் 
🌟பிரிஞ்சி இலை இரண்டு 
🌟மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
🌟 பீன்ஸ் 8 
🌟கேரட் ஒன்று 
🌟உருளைக்கிழங்கு ஒன்று 
🌟உப்பு 1&1/4 டீஸ்பூன்
 🌟தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் 
🌟தேங்காய் பால் மூன்று டேபிள் ஸ்பூன் 
🌟பால் கால் கப் 
🌟வெந்நீர் இரண்டரை கப் 
🌟அரை கப் புதினா 
🌟அரை கப் கொத்தமல்லி

❤️செய்முறை 

🌟ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசி சீரக சம்பா அரிசி சேர்த்து நன்கு கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும் 

🌟ஒரு தட்டில் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் ,பட்டை ,லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ,மராட்டி மொக்கு ,நட்சத்திர சோம்பு ,ஜாதி பத்திரி ,சீரகம் ,சோம்பு, கஸ்தூரி மேத்தி அனைத்தையும் ஒன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 

🌟குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் .

🌟பின் கலந்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும் .

🌟பின் பெரியதாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.

 🌟பின் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு நீளமாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கலந்து விட்டு உப்பு சேர்த்து வெந்நீரை சேர்த்து கலந்து விடவும்.

 🌟ஒரு கொதி வந்தபின் தயிர், தேங்காய்ப்பால் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து கலந்து விடவும்.

 🌟பின் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லியை சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி வந்தபின் ஊறவைத்த அரிசியை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

🌟 நன்கு கலந்து விட்டு அதிக தீயில் இரண்டு நிமிடம் கொதி வந்தபின் மிதமான தீயில் குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கவும் .

🔥அட்டகாசமான சுவையில் வித்தியாசமான முறையில் வெஜிடபிள் பிரியாணி தயார்.

 இது போன்ற சமையல்‌ பதிவிற்

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...