ஜிகிர்தண்டா (வீட்டு செய்முறை)
நாட்டு மருந்துக் கடைகளில் பாதாம் பிசின் கிடைக்கும்... இது பனங்கற்கண்டு போல இருக்கும். இதை ஒரு முறை அலசி, ஊற வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் ஊறியதும் ஒரு பெரிய கப் அளவு வந்துவிடும். அதனால். குறைவாகவே தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பாதாம் பிசின் உடைந்த ஐஸ் கிரிஸ்டல் போல இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
டம்ளர் தயாரிக்க...
என்னென்ன தேவை?
பால் - அரை லிட்டர் (காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லாக்கவும்)
ஊற வைத்த பாதாம் பிசின் - 2 டேபிள்ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 2 டேபிள்ஸ்பூன்
பாசந்தி - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - 2 பெரிய ஸ்கூப்.
எப்படிச் செய்வது?
பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் பாதாம் பிசின் போடவும். அதன் மேல் சிறிது சர்பத் ஊற்றவும். கொஞ்சம் ஐஸ்க்ரீம் போடவும். இப்போது பாலை முக்கால் டம்ளர் அளவு ஊற்றவும். அதன் மேல் மீண்டும் சர்பத், ஐஸ்க்ரீம், மேலே பாசந்தி, மீண்டும் ஒரு சிறிய ஸ்பூன் சர்பத் அழகுக்கு ஊற்றி பெரிய ஸ்பூன் போட்டு பரிமாறவும்.
உங்கள் கவனத்துக்கு...
இப்படி படிப்படியாக போடுவதால் குடிக்கும் போதும் படிப்படியான சுவையை அறியலாம். வெனிலா ஐஸ்க்ரீம் வீட்டில் செய்வதாக இருந்தால் சர்க்கரையை சிறிது கேரமைஸ் செய்து போடவும். நல்ல கலர் வரும். அதிகம் இனிப்பு தேவைப்படுபவர்கள் பாலில் சிறிது சர்க்கரை கலந்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
‘ஜிகிர்’ என்றால் இதயம்... ‘தண்டா’ என்றால் குளிர்ச்சி. இதயத்துக்கு இதமானது என்ற பொருளில், இந்த பானத்தை அந்தக் காலத்தில் சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்தார்களாம்!
No comments:
Post a Comment