WELCOME to Information++

Wednesday, September 24, 2025

ஹைதராபாத் சிக்கன் குருமா செய்வது எப்படி........

ஹைதராபாத் சிக்கன் குருமா செய்வது எப்படி........

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தேவையான பொருட்கள்
 
1 கிலோ சிக்கன்
1 கப் எண்ணெய்
2 துண்டு பட்டை
3 கிராம்பு
4 ஏலக்காய்
1/2 தேக்கரண்டி சோம்பு
2 வெங்காயம்
2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தண்ணீர்
350 கிராம் கெட்டி தயிர்
1/4 கப் மல்லி இலை
1/4கப் புதினா
3 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் கரம் மசாலா
1 சிறிய உருளைக்கிழங்கு
2மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
அரைப்பதற்கு
1 மேஜை கரண்டி எண்ணெய்
2 வெங்காயம்
1/2 கப் கொப்பரை தேங்காய்
2மேஜை கரண்டி கசகசா
2மேஜை கரண்டிவறுத்த நிலக்கடலை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செய்முறை :::

ஒரு வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வதங்கிய பின் சிறியதாக நறுக்கிய கொப்பரை தேங்காயை சேர்த்து சிறு தீயில் நன்றாக பொன் நிறத்தில் வதக்கவும். 
இதோடு கசகசா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும் நன்றாக ஆரிய பின் மிக்ஸியில் சேர்த்து கூடவே நிலக்கடலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

குருமா செய்வதற்கு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்கவும். குழம்பு செய்வதற்கு வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து வதக்கவும். சிறு தீயில் பொன்னிறமாக வெங்காயத்தை வறுக்க வேண்டும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வதக்கியதும் அரைத்து விழுதை சேர்த்து நன்றாக எண்ணெயில் இந்த மசாலாவோடு வதக்க வேண்டும்.

தேங்காய் சேர்த்து இருப்பதனால் அடிப்பிடிக்க கூடும் அதனால் அரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் என்னை பிரிந்து வரும் வரை வதக்கவும் மூடி போட்டு வதக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து தீயை குறைத்து தயிரை சேர்த்து கொள்ளவும் கூடவே மல்லி புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பிறகு கரம் மசாலா தூள், நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிக்கன் சேர்த்து கலந்து விடவும்.

சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதிகமான தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும். 15 நிமிடங்களில் கோழிக்கறி நன்றாக வெந்துவிடும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரும் அதுல இருக்கும் தேவைப்பட்டால் சரி பார்த்துக் கொள்ளவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான சிக்கன் குருமா தக்காளி சேர்க்காமல் செய்யப்பட்டது.....

#fblifestyle

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...