மஷ்ரூம் ஃப்ரை செய்வது எப்படி....
தேவையானவை: காளான் – 500 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், பூண்டு – 10 கிராம், பொட்டுக்கடலை – 20 கிராம், சோம்பு – 5 கிராம், காய்ந்த மிளகாய் – 5, மிளகு – 10 கிராம், வேர்க்கடலை – 10 கிராம், மிளகாய்த்தூள் – 2 கிராம், மஞ்சள்தூள் – 2 கிராம், மல்லித்தூள் – 2 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மைதா, ரொட்டித்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காளான், பூண்டு, வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் மிளகு, வேர்க்கடலை அனைத்தையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், காளான், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்பு வறுத்து அரைத்த பொடி, வதக்கியவை இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை காளான் வடிவத்தில் பிடித்து மைதா கரைசலில் நனைத்து, ரொட்டித்தூளில் ஒற்றி எடுக்கவும். பின்பு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
#வீட்டுசமையல்
No comments:
Post a Comment