அசத்தல் டிப்ஸ்.....
* வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தைத் தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டுப் பின்னர் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாகப் பிரியாமல் வட்டமாக இருக்கும்.
* பாலேடு, தயிர் ஏடுகளை பாட்டிலில் போட்டுக் குலுக்க... வெண்ணெய், மோர் ஒரே நேரத்தில் கிடைக்கும்.
* நமர்த்த பிஸ்கட்டை ஒன்றிரண்டாகப் பொடித்து, பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* பூசணியைச் சமைக்கும்போது விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியைத் தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவோடு சேர்த்து அரைத்தால், மிருதுவான தோசை கிடைக்கும்.
* முருங்கைக்கீரையைச் சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
* கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் மிருதுவாக உப்பி வரும்.
* கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரெட் ஸ்லைஸில் ஒருபுறம் தடவி, நெய்விட்டு டோஸ்ட் செய்தால் தனிச்சுவையைத் தரும்...
#வீட்டுசமையல்
No comments:
Post a Comment