WELCOME to Information++

Tuesday, September 9, 2025

குசுக்கா


வீட்டில் கவுச்சி வாங்காத அன்று இந்த குசுக்கா செய்து பாருங்கள் 

முதலில் தேவையானதை எடுத்துக் கொள்ளவும்.
.
மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,கரம்மசாலாப் பொடி எடுத்துவைக்கவும்.

மல்லித்தழையை பொடியாகக்கட் பண்ணவும்.

பாஸ்மதி அரிசியை சுத்தம்பண்ணி அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

அடுப்பில் குக்கரைவைத்து நெய்+எண்ணெய்விடவும்.

தாளிக்கமசாலாப் பொருட்களைப் போடவும்.

பின்கட்பண்ணிய வெங்காயம் போடவும்.

பின் பச்சைமிளகாய்-1 
அரைத்த இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்.பொடிவகைகளைச் சேர்க்கவும்.

தயிர் -3 ஸ்பூன் சேர்க்கவும்.

பின் பாஸ்மதிஅரிசியைப் போட்டு தேவையான தண்ணீர்விடவும்.

புதினா, மல்லிதழை கட்பண்ணிக்கொள்ளவும். 

அதையும் குக்கரில் சேர்த்து விடுங்கள்.

உப்புச் சேர்க்கவும்.தண்ணீர் அளவைப் பார்த்து விட்டு குக்கரை மூடவும்.2 விசில் வந்ததும் 3நிமிடங்கள் சிம்மில் வைத்து விட்டு பின் அடுப்பை ஆப் பண்ணவும்.கொஞ்சம் நேரம் கழித்து குக்கரைத் திறக்கவும்.குஸ்கா ரெடி.

#fbpost #tipsandtricks #cookwithsajee #cookinghacks

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...