பிரியாணி செய்ய டிப்ஸ்....
பிரியாணி தயாரிக்கும்போது, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை அப்படியே போட வேண்டுமா அல்லது வறுத்துப் பொடி செய்து போடலாமா... ஒரு கிலோ சிக்கனுக்கு எத்தனை கிராம் இவற்றைச் சேர்க்க வேண்டும்...
பிரியாணி தயாரிப்பதற்கு பச்சரிசி, பாஸ்மதி அரிசி, சீரக சம்பா என பலவிதமான அரிசி வகைகளைப் பயன் படுத்துவார்கள். பொதுவாக பாஸ்மதி அரிசியைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால் அந்த அரிசியில் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி தயாரிக்க மசாலா பொருள்களின் அளவைப் பார்ப்போம். ஒரு கிலோ சிக்கன் பிரியாணி தயாரிக்க பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவை தலா 10 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சரிபாதியை, தாளிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீதியை நன்கு வறுத்து அரைத்து, கடைசியில் பிரியாணியில் தூவினால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment