WELCOME to Information++

Thursday, January 1, 2026

பரோட்டா செய்வது எப்படி...


.பரோட்டா செய்வது எப்படி... 

செய்முறை

இந்த பரோட்டா செய்வதற்கு முதலில் இரண்டு கப் மாவை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைந்த பிறகு கடைசியாக இதன் மேல் லேசாக எண்ணெய் தடவி பிறகு, இரண்டு மணி நேரம் வரை இதை அப்படியே மூடி வைத்து விடுங்கள். இந்த மாவு நன்றாக ஊறினால் தான் பரோட்டா நல்ல சாஃப்ட்டாக கிடைக்கும்.

இரண்டு மணி நேரம் கழித்து பிசைந்து வைத்த மாவை உருட்டி கைகளில் கட்டை விரல், மோதிர விரல் இடையே வைத்து அழுத்தினால் பந்து போல வரும் இதை அப்படியே எடுத்து வைத்து விடுங்கள். இப்படி செய்த பிறகு அனைத்து மாவின் மீதும் லேசாக எண்ணெய் தடவி மீண்டும் ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

பத்து நிமிடம் கழித்து உருண்டைகளை எடுத்து சப்பாத்தி திரட்டுவது போல திரட்டுங்கள். இதை நீங்கள் எவ்வளவு அகலமாக தேய்க்க முடியுமோ அந்த அளவிற்கு தேய்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கத்தி வைத்து தேய்த்த மாவில் இடையிடையே கோடுகள் போட்டுக் கொடுங்கள். மாவு பிய்ந்து வரும் இருந்தாலும் பரவாயில்லை அப்படியே மாவை கைகளாலே எடுத்து ஒரு சுற்று சுற்றி அப்படியே வைத்து விடுங்கள்.

இப்படி எல்லா உருண்டைகளையும் தட்டி வைத்த பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டையை கைகளாலே அழுத்த வேண்டும். சப்பாத்தி கட்டை கொண்டு தேய்க்க வேண்டாம். இப்படி அழுத்தினாலே நமக்கு பரோட்டா சரியான பதத்திற்கு வந்து விடும்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து சூடான பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி விடுங்கள். இப்போது தேய்த்து வைத்த பரோட்டாகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்க வேண்டும். பரோட்டாவை போட்டு ஒரு புறம் சிவந்து வரும் வரை காத்திருக்காமல் போட்டவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் திருப்பி, திருப்பி போட வேண்டும். அப்போது தான் பரோட்டா சாப்டாக இருக்கும். பரோட்டாவை கடைசியாக எடுக்கும் முன்பு மேலே லேசாக எண்ணெய் தடவி இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள்.

பரோட்டாவை எடுத்தவுடன் அப்படியே வைத்து விடாமல் இரண்டு பக்கமும் கைகளால் லேசாக தட்டி வையுங்கள். அப்போது தான் லேயர் சரியாக வரும். பரோட்டா ஆறிய பிறகு தட்டிக் கொள்ளலாம் என்று வைத்தால் லேயர் வராது. அவ்வளவு தான் சாப்ட்டான லேயர் பரோட்டா தயார்.

No comments:

Post a Comment

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி --- 1️⃣ அரைக்கீரை பருப்பு வடை தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் அரைக்கீரை ...