WELCOME to Information++

Thursday, January 1, 2026

மட்டன் பிரியாணி செய்வது எப்படி...

மட்டன் பிரியாணி  செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்

500 கிராம் பாசுமதி அரிசி

500 கிராம் மட்டன்

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

1/2 கப் தயிர்

4 to 5 பச்சை மிளகாய்

1 மேஜைக்கரண்டி இஞ்சி பேஸ்ட்

1 மேஜைக்கரண்டி பூண்டு பேஸ்ட்

4 பிரியாணி இலை

1 மேஜைக்கரண்டி சீரகம்

1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

7 கிராம்பு

3 ஏலக்காய்

1/2 மேஜைக்கரண்டி சோம்பு

1/2 மேஜைக்கரண்டி மிளகு

மிளகாய்த்தூள் தேவையான அளவு

2 பட்டை

2 நட்சத்திர பூ

2 மேஜைக்கரண்டி மல்லி

1 ஜாதிபத்திரி

எண்ணெய் தேவையான அளவு

நெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி ஒரு கை

புதினா ஒரு கை

செய்முறை

 

முதலில் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஜாதிபத்திரி, நட்சத்திர பூ, பட்டை, 5 கிராம்பு, ஒரு ஏலக்காய், சீரகம், மிளகு, சோம்பு, 2 பிரியாணி இலை மற்றும் தனியாவை ஒன்றாக சேர்த்து சுமார் 3 நிமிடம் வரை வறுக்கவும்.

 

 

இவை சிறிது நிறம் மாறியதும் அதை மிக்சியில் போட்டு நன்கு நைசாக தூள் செய்து கொள்ளவும்.

 

 

இப்பொழுது குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி சுட வைக்கவும்.

 

 

எண்ணெய் சிறிது சுட்டதும் அதில் 2 பிரியாணி இலை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, தேவையான அளவு உப்பு மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.

 

 

வெங்காயம் பொன்னிறமானதும் அதில் 4 அல்லது 5 பச்சை மிளகாய், ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சைவாசம் போகும் வரை வதக்கவும்.

 

 

பின்பு அதில் மஞ்சள் தூள், அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப மிளகாய்த்தூள், மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாதூளை சேர்த்து நன்கு கிளறவும்.

 

 

அடுத்து அதில் சிறிது அளவு கொத்தமல்லி, மற்றும் ஒரு கை அளவு புதினா சேர்த்து ஒரு கிளறு கிளறி பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

 

 

பின்னர் அதில் அரை கப் அளவு தயிர் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதில் மட்டனை போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சரியாக 4 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வைக்கவும். (இளம் கறியாக இருந்தால் 4 விசிலும் சிறிது முத்துன கறியாக இருந்தால் 6 விசிலும் வைக்க வேண்டும்.)

 

 

4 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்ததை உறுதி செய்த பின் அதில் பாசுமதி அரிசியை போட்டு மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். 3 நிமிடத்திற்கு பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை குக்கரை திறக்காமல் அப்படியே வைக்கவும்.

 

 

15 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்தால் உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் பிரியாணி தயார். இப்பொழுது இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லி தூவி ரைத்தா உடன் பரிமாறலாம்.

 

 

இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

No comments:

Post a Comment

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி --- 1️⃣ அரைக்கீரை பருப்பு வடை தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் அரைக்கீரை ...