மீன் குழம்பு செய்வது
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 500 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 6 பல்
இஞ்சி – 1 சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – தேவைக்கு
செய்முறை:
1. புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் சூடானதும் சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
3. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
7. புளி கரைசல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
8. குழம்பு கொதித்ததும் மீன் துண்டுகள் சேர்த்து 8–10 நிமிடம் வேகவிடவும்.
9. கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
சாதம், தோசை, இட்லியுடன் சுவையான மீன் குழம்பு தயார்..
No comments:
Post a Comment