ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி.....
தேவையான பொருள்கள்:
1. ஜவ்வரிசி
2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
3. வறுத்த வேர்க்கடலை
4. பச்சை மிளகாய்
5. துருவிய இஞ்சி
6. உப்பு
7. பொட்டுக்கடலை
8. கொத்தமல்லி
9. நெய்
10. எலுமிச்சம்பழம்
செய்முறை:
1. ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
2. கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
3. இதோ இப்போது சுவையான ஜவ்வரிசி உப்புமா தயார்.
#sivaaarthika
No comments:
Post a Comment