பீர்கங்காய் கூட்டு செய்வது எப்படி....
தேவையானவை:
*பீர்க்கங்காய் -2*
*கடலைபருப்பு-1/4 கப்*
*சாம்பார் பொடி-2 ஸ்பூன்*
*அரைக்க:*
*தேங்காய் துருவல்-1/2 கப்*
*பச்சைமிளகாய்-2*
*சீரகம்-சிறிதளவு*
*தாளிக்க:*
*கடுகு*
*கருவேப்பில்லை*
*சின்ன வெங்கயம்-5*
*பூண்டு-2 பல்**
செய்முறை:
*குக்கரில் பீர்கங்காய்,கடலைபருப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்து வைக்கவும்.*
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,அதில் சாம்பார் பொடியை சேர்த்து , அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி நன்கு வதக்கவும்.*
*வேகவைத்து எடுத்து வைத்துள்ள பீர்கங்காயில் ,வதக்கி வைத்துள்ள பொருட்களை கொட்டி உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.*
*சுவையான பீர்க்கங்காய் கூட்டு ரெடி*
#sivaaarthika
No comments:
Post a Comment