WELCOME to Information++

Monday, August 25, 2025

ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?..


ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?..

தேவையான பொருட்கள் 

உருளைக்கிழங்கு - 4 

துருவிய கேரட் - 1 

நறுக்கிய குடைமிளகாய் - 1/2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2 

துருவிய பன்னீர் - 250 கிராம் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்  

பிரட் - 2 

உப்பு - தேவையான அளவு 

லாலிபாப் மேல் பூசுவதற்கு . :

சோள மாவு - 1 டீஸ்பூன்  

மைதா மாவு - 1 டீஸ்பூன் 

உப்பு - 1 சிட்டிகை

மிளகு தூள் -  1 சிட்டிகை 

தண்ணீர் - தேவையான அளவு 

பிரட் தூள் - 2 கப்  

குச்சிகள் - 6 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை .

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.  
மசித்து உருளைகிழங்கில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய  குடை மிளகாய், பொடியாக  நறுக்கிய  வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு துருவிய பன்னீர், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  பின் கொத்தமல்லி, பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள லாலிபாப் கலவையை குச்சிகளில் சிக்கன் கால் போன்ற வடிவில் செட் செய்து கொள்ள வேண்டும்.  

ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, மிளகுதூள், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு  பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் செய்து வைத்துள்ள வெஜ் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.

ஒரு ப்ளேட்டில் பிரட் தூளை கொட்டி அதில்  வெஜ் லாலி பாப்களை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலி பாப்களை பொரித்து. எடுக்கவும்.  

ஒரு பிளேட்டில் வெஜ் லாலி பாப்களை  சூடாக எடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். இதோ சூடான சுவையான சத்து மிக்கவெஜ் லாலிபாப் தயார்.

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...