வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி.....
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்
முதலில் வெண்டைக்காய் கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளியியையும் நறுக்கி வைக்கவும்.தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போடவும்.பின் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.பின்பு நறுக்கிய வெண்டைக்காய்,சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்,வெண்டைக்காய் வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்கியதும் புளிக்கரைசல் விட்டு கொதிக்க விடவும்.
பின் தனியே வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்.வெண்டைக்காய் சேர்த்து நன்கு கொதிவரும், மூடி போட்டு 5 நிமிடம் மிதமான நெருப்பில் வைக்கவும்.பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்,குழம்பு கெட்டி தன்மைக்கு தகுந்தபடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்.
தேங்காய் வாடை அடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.இப்போது சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
#sivaaarthika
No comments:
Post a Comment