WELCOME to Information++

Saturday, August 23, 2025

பூண்டு குழம்பு செய்வது எப்படி....


பூண்டு குழம்பு செய்வது எப்படி....

தேவையான பொருட்கள்

பூண்டு – 20 -30 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது

செய்முறை

புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து க;அந்து கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு
திக்காகும் வரை கொதிக்க விடவும் அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...