சிக்கன் மசாலா செய்வது எப்படி.....
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சிக்கன் கால் - 5
உப்பு
தண்ணீர்
கறிவேப்பில்லை
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை
1. கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
2. இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பச்சை வாசனை போனதும், இதில் சிக்கன்'னை போட்டு கிண்டவும்.
5. கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
6. இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பில்லை இலை போட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும், இதில் கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
8. மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா தயார்.
#sivaaarthika
No comments:
Post a Comment