உருளைக்கிழங்கும் கருப்பு கடலையும் சேர்த்து செய்யும் இந்த மசாலா பூரி, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்🌸
தேவையான பொருட்கள்:
கருப்பு கடலை (சணா ) – 1 கப் (இரவு முழுக்க ஊறவைத்து வேகவைத்தது)
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து துண்டுகள்)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 tsp
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 tsp
மல்லித்தூள் – 1 tsp
சீரகத்தூள் – ½ tsp
கரம் மசாலா – ½ tsp
மஞ்சள் தூள் – ¼ tsp
சீரகம் – ½ tsp
கொத்தமல்லி இலை – 2 tbsp (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 tbsp
---
செய்வது எப்படி:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும்.
2. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் வெளியேறும் வரை வதக்கவும்.
4. வேகவைத்த சணா மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கலக்கவும்.
5. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, கடைசியில் கரம் மசாலா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பரிமாறும் விதம்:
சூடாக சப்பாத்தி, பூரி, ரொட்டி அல்லது ஜீரா ரைஸ் உடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment