WELCOME to Information++

Saturday, August 23, 2025

கேபேஜ் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி.....


கேபேஜ் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி.....
            

தேவையான பொருட்கள்
            
           
 நூடுல்ஸ் ரெடிமேட் பாக்கெட் -400 கிராம் (கறி மசாலா ஃப்ளேவர்)
முட்டை - 3
கோஸ் - கால் கிலோ
வெங்காயம் - 2 பெரியது
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
            
            செய்முறை
            
            * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் நூடுல்சை உடைக்காமல் அப்படியே போட்டு வேக வைத்து வடித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், முட்டை கோஸ் சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.
* கோஸ்,வெங்காயம் வதங்கியதும் அடித்து வைத்த முட்டை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வெந்ததும் பிரட்டி விடவும்.
* நூடுல்ஸ் பேக்கில் உள்ள கறி மசாலாவை தேவைக்கு சேர்க்கவும்.அதில் உப்பு இருக்கும்.மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்பு அத்துடன் வேக வைத்து வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி தேவைக்கு மிளகுத்தூள் சேர்க்கவும்.இப்போது சுவையான கேபேஜ் எக் நூடுல்ஸ் தயார்.

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...