இறால் பிரியாணி செய்வது எப்படி......
பட்டை
கிரம்பு
ஏலக்காய்
கல்பாசி
ஜாவித்ரி
பிரியாணி இலை
மராட்டி மொக்கு
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
உப்பு ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் 2
வெங்காயம் 3
இஞ்சி ஒரு பெரிய துண்டு
பூண்டு 10 பல்
புதினா ஒரு கையளவு
கொத்துமல்லி ஒரு கையளவு
தயிர் 2 மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் இரண்டு
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டீஸ்பூன் கரம் மசாலா
அரை கிலோ இறால் சுத்தம் செய்தது
பாஸ்மதி அரிசி இரண்டரை கப்
பாதி எலுமிச்சை பழம்
கேசரி கலர் (தேவைப்பட்டால் )
குக்கர் அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அண்ணாசி பூ, ஜாவித்ரி, பிரியாணி இலை, மராட்டி மொக்கு, சிறிது வெங்காயம் போட்டு நன்றாக தாளித்து.
அதனுடன் மீதி வெங்காயம் போட்டு பொன்னிநிறமாக வதக்கவும்.
மிக்சி யில் இஞ்சி& பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயம், சிறிது புதினா கொத்தமல்லி போட்டு லேசாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
தக்காளி சேர்த்து அதனுடன் கையளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து மேரினேட் செய்த இறாலை குக்கரில் போட்டு நன்றாக கிளறவும்.
ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்னேகால் கப் தண்ணீர் என்ற கணக்கில் அரிசிக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை போடவும்.
அரை எலுமிச்சம்பழம் பிழியவும், தேவைப்பட்டால் கேசரி கலர் சேர்க்கவும்.
குக்கரை மூடி 10 நிமிடம் வேக விடவும் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து லேசாக கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி தயார்.
#sivaaarthika
No comments:
Post a Comment