WELCOME to Information++

Thursday, August 21, 2025

காரக் குழிப்பணியாரம் செய்வது எப்படி.....


காரக் குழிப்பணியாரம் செய்வது எப்படி.....

தேவை: 

இட்லி அரிசி - ஒன்றரை கப், பச்சரிசி - அரை கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், உளுந்து - அரை கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க: 

நல்லெண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்

செய்முறை: பணியாரத்துக்கு வேண்டிய இட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து, உப்பு கலந்து புளிக்கவைத்து எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு கலந்து நன்கு வதக்கி, இதை மாவில் சேர்த்துக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல் சூடானதும் அதில் ஊற்றி வேகவைத்து எடுத்தால், சுவையும் காரசாரமுமான சத்தான குழிப்பணியாரம் தயார். இதற்குத் தேங்காய்ச்சட்னி அல்லது காரச்சட்னி தொட்டுக்கொள்ளலாம்.

சிறப்பு: இதை காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சத்தான அதேநேரம் ருசியான ஆரோக்கியமான பணியாரம் இது.

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...