WELCOME to Information++

Wednesday, August 13, 2025

பரோட்டா கடை வெஜ் சால்னா


🔥😱பரோட்டா கடை வெஜ் சால்னா 😋✨இனி ஈசியா இப்படி செய்ங்க அட்டகாசமான சுவையில் 🤩

🌺தேவையான பொருட்கள் 

🍁கடாயில் வதக்கி அரைக்க 

✨எண்ணெய் 1 டீஸ்பூன் 
✨ஒரு டீஸ்பூன் சோம்பு 
✨ ஒரு டீஸ்பூன் சீரகம் 
✨ஒரு டீஸ்பூன் மிளகு, 
✨கல்பாசி ஒரு இன்ச் 
✨பட்டை இரண்டு 
✨ஏலக்காய் 3 
✨கிராம்பு 3
✨வெங்காயம் இரண்டு 
✨கொத்தமல்லி கால் கப் 
✨புதினா கால் கப் 
✨தக்காளி 2 

🍁மிக்ஸி ஜாரில் 

தேங்காய் துருவல் அரை கப் 
ஊர் வைத்த முந்திரி பத்து 
கசகசா ஒரு டீஸ்பூன் 

🍁குக்கரில் 

✨எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன் 
✨பிரிஞ்சி இலை இரண்டு 
✨சோம்பு அரை டீஸ்பூன் 
✨இஞ்சி பூண்டு விழுது இரண்டு டீஸ்பூன் ✨வெங்காயம் ஒன்று 
✨தக்காளி ஒன்று 
✨மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் 
✨மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் 
 ✨குழம்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் ✨சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன் 
✨தண்ணீர் அரை லிட்டர் 
✨உப்பு தேவைக்கேற்ப 
✨கொத்தமல்லி தழை

🌺செய்முறை 

✨மேலே கொடுக்கப்பட்டுள்ள வதக்கி அரைக்க கூடிய மசாலாக்களை கடாயில் சேர்த்து மிதமான தீயில் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் லேசாக வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

✨மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் முந்திரி, கசகசா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

✨குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பின் சோம்பு ,பிரிஞ்சி இலை ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கிக் கொள்ளவும்.

✨ பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும்வரை வதக்கிக் கொள்ளவும்.

 ✨மிக்ஸி ஜாரில் அரைத்த ஒரு  தக்காளி விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும் .

✨மஞ்சள் தூள், மல்லித்தூள் ,குழம்பு மிளகாய் தூள் ,தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் வதக்கி அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

 ✨அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு இரண்டு நிமிடம் கொதிவரும் வரை காத்திருக்கவும்.

✨ பிறகு தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விட்டு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

 ✨குக்கரை மூடி வைத்து இரண்டிலிருந்து மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும்.

 ✨பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி கலந்து விட்டு இறக்கவும்.

✨ அட்டகாசமான சுவையில் பரோட்டா சால்னா தயார்.😋

 இது போன்ற சமையல் பதிவிற்கு Ammadi Kitchen  பின்தொடரவும் நன்றி, 🙏 

#fbviralpost2025シ #viralpost2025シ #viralpost2025 #fbviralpost #fbtrendingpost #viralphotochallenge #fbviral #cooking #recipeoftheday #food #foodphotography #instapost #viralpost #instagood #instafood #foodie #tamilfood #salna #sidedishforchapathi #fypシ゚viralシ

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...