கத்தரிக்காய் கறி ரெசிபி:
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 250 கிராம் (நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்)
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொப்பு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
5. நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து சமைக்கவும்.
6. கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Thank you❤🌹🙏
Thara's Kitchen
No comments:
Post a Comment