WELCOME to Information++

Thursday, August 21, 2025

காளான் புலாவ் செய்வது எப்படி.....


காளான் புலாவ் செய்வது எப்படி.....

தேவையானப் பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கிலோ
பட்டன் காளான் - 250 கிராம்
பச்சைப் பட்டாணி - 150 கிராம்
வெங்காயம் - 6
இஞ்சி-பு+ண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
முந்திரி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் தேங்காயை உடைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரியை நெய் ஊற்றி பொரித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு காளானை உப்பு கலந்த நீரில் போட்டு பின்புறம் இருக்கும் பழுப்பு நிறம் போகும்வரை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டுச் சூடாக்கி கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டுத் தாளிக்க வேண்டும்.
பிறகு அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, காளான், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், பாதியளவு வெங்காயம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதனுடன் கரம் மசாலா, சிறிதளவு உப்பு, தேங்காய்ப் பால், அரிசி சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
கடைசியாக 2 விசில் வந்ததும் அடுப்பை மீதமான தீயில் 10 நிமிடம் வைத்துப் பிறகு அணைத்துவிட வேண்டும். சூடு ஆறியதும் நெய்யில் பொரித்த முந்தரி, வெங்காயம், மீதியுள்ள புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் எலுமிச்சைச் சாறு தூவிப் பரிமாறினால், சூப்பரான காளான் புலாவ் தயார்...

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...