WELCOME to Information++

Tuesday, August 19, 2025

சௌ சௌ சட்னி செய்வது எப்படி ✍️


சௌ சௌ சட்னி செய்வது எப்படி ✍️

தேவையான பொருட்கள்:
✍️ சௌ சௌ - 1 (சிறியது)
✍️ பெரிய வெங்காயம் - 1
✍️ தக்காளி - 1
✍️ காய்ந்த மிளகாய் - 4-5 (காரத்திற்கு ஏற்ப)
✍️ உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
✍️ கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
✍️ பூண்டு - 4-5 பல்
✍️ புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
✍️ கறிவேப்பிலை - சிறிதளவு
✍️ கொத்தமல்லி தழை - சிறிதளவு
✍️ எண்ணெய் - 2 தேக்கரண்டி
✍️ உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
✍️ எண்ணெய் - 1 தேக்கரண்டி
✍️ கடுகு - 1/2 தேக்கரண்டி
✍️ உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
✍️ பெருங்காயம் - சிறிதளவு
✍️ கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
✍️ சௌ சௌ காயை தோல் நீக்கி, விதையை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
✍️ வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
✍️ காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
✍️ நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
✍️ சௌ சௌ துண்டுகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
✍️ புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
✍️ ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
✍️ தாளிக்க, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலக்கவும்.

சுவையான சௌ சௌ சட்னி தயார்! 🍽️
இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையான சைடு டிஷ். 😋

🦋🦋🦋 இது போன்ற தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எனது பக்கத்தினை ஃபாலோ செய்யவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும் நன்றி 🦋🦋🦋🦋

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...