WELCOME to Information++

Saturday, December 20, 2025

அரேபியன் மட்டன் மந்தி ரெசிபி (Arabian Mutton Mandi) ✍️


🐑 அரேபியன் மட்டன் மந்தி ரெசிபி (Arabian Mutton Mandi) ✍️

மந்தி என்பது ஏமன் மற்றும் அரேபிய உணவுகளில் இருந்து வந்தது. இந்த உணவு சாதாரணமாக சிறப்பு தினங்களில், திருமணங்களில் பரிமாறப்படும். 

✍️ தேவையான பொருட்கள் (4 பேருக்கு):

➤ மட்டனுக்காக:

✍️ மட்டன்– 1/2 கிலோ
✍️ இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
✍️ மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
✍️ மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ லெமன் ஜூஸ் – 1 மேசைக்கரண்டி
✍️ தயிர் – 2 மேசைக்கரண்டி
✍️ எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

➤ சாதத்திற்கு:

✍️ பாஸ்மதி அரிசி – 2 கப்
✍️ வெங்காயம் – 1 (நறுக்கியது)
✍️ பட்டை – 1 துண்டு
✍️ லவங்கம் – 2
✍️ ஏலக்காய் – 2
✍️கயிந்த எலுமிட்சை- 3
✍️ பிரியாணி இலை – 1
✍️ பெருஞ்சீரகம் – ½ மேசைக்கரண்டி
✍️ மந்தி மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி (கீழே செய்முறை உள்ளது)
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ மட்டன் சாறு – 3½ கப்

✍️ மந்தி மசாலா தூள் (முந்தையதாக தயார் செய்துவைக்கவும்):

✍️ லவங்கம் – 1 மேசைக்கரண்டி
✍️ ஏலக்காய் – 1 மேசைக்கரண்டி
✍️ பட்டை – 1 துண்டு
✍️ மிளகு – 1 மேசைக்கரண்டி
✍️ சீரகம் – ½ மேசைக்கரண்டி
✍️ கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி
✍️ ஏலக்காய் பவுடர் – சிறிது

🔴🔴இவை அனைத்தையும் வறுத்து தூளாக்கி வைக்கவும்.

🔴🔴செய்முறை:

✍️ மட்டனில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், லெமன் ஜூஸ், மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து, குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஊற வைக்கவும். (இது ருசியை கூட்ட உதவுகிறது)

🔴🔴மட்டனை சமைக்க:

✍️ ஒரு பெரிய பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் மசாலா போட்டுள்ள மட்டனை வைத்து, குறைந்த தீயில் மென்மையாக வேகவைக்கவும்.

✍️ 80% வெந்ததும் எடுத்து வைக்கவும். சாறு  சுத்தமாக வடிகட்டி வைக்கவும் — இது தான் சாதத்திற்கான essence!

🔴🔴சாதம் செய்முறை:

✍️ அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்
✍️ கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை,கயிந்த எலுமிட்சை , பெருஞ்சீரகம் போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும்
✍️ வெங்காயம்,  சேர்த்து வதக்கவும்
✍️ மந்தி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
✍️ வடிகட்டிய மட்டன் சாறு சேர்த்து கொதிக்க விடவும்
✍️ அரிசி சேர்த்து, குறைந்த தீயில் 80% சமைக்கவும்

🔴🔴தந்தூரி/ஓவனில் மட்டன் வறுக்க:

✍️ வேகவைத்த மட்டனை Grill பண்ணலாம் அல்லது ஒரு தாவாவில் எண்ணெய் விட்டு வறுக்கலாம்
✍️ மேலே சிறிது மந்தி மசாலா தூள் தூவலாம்

🔴🔴தம் போடுவது (Dum/Coal method – Optional):

✍️ சாதத்தை முடித்ததும், அதன் மீது வறுத்த மட்டன் வைத்து
✍️ ஒரு மூடிய கலத்தில் எரிந்து கொண்டிருக்கும் கட்டி (coal) வைத்து, சிறிது நெய் அல்லது ghee ஊற்றவும்
✍️ உடனே மூடி 5 நிமிடம் விடவும் — இது உணவுக்கு அந்த அரேபிய ருசியை தரும்!
பின் நெய்யில் வறுத்த முந்திரி திரச்சை துவவும் 

✍️ சாதத்தை ஒரு பெரிய தட்டில் பரப்பி, மேலே வறுத்த மட்டன் பீஸ்களை வைக்கவும்
✍️ கொத்தமல்லி, லெமன் வெட்டிய துண்டுகள், மற்றும் சைடு ராயிதா சேர்த்து பரிமாறவும்

🦋🦋🦋 இது போன்ற தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எனது பக்கத்தினை ஃபாலோ செய்யவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும் நன்றி 🦋🦋🦋🦋

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...