இரண்டு வகையான பருப்பு வடை
---
1) சாதாரண பருப்பு வடை
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு 1 கப்
உலுந்து 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறியது
கறிவேப்பிலை
சீரகம் 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
கடலைப் பருப்பு மற்றும் உலுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் முழுவதும் வடித்து, கொரகொரப்பாக அரைக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும். கையால் தட்டையாக செய்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
---
2) மிளகு பருப்பு வடை
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு 1 கப்
உலுந்து 2 டேபிள்ஸ்பூன்
கருப்பு மிளகு பொடி 1½ டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
பருப்புகளை ஊற வைத்து தண்ணீர் வடித்து கொரகொரப்பாக அரைக்கவும். மிளகு பொடி, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வடை வடிவில் செய்து, மிதமான சூட்டில் எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment