🌶️ அட்டகாசமான ரசப்பொடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை – 1 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
உளுந்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 4 டேபிள்ஸ்பூன்
உலர் மிளகாய் – 15
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கப் (நிழலில் உலர்த்தியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
1. கடாயை சூடாக்கி, கொத்தமல்லி விதையை மிதமான தீயில் வறுக்கவும்; வாசனை வந்ததும் எடுத்து வையவும்.
2. அடுத்ததாக துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும்.
3. உலர் மிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம் வறுக்கவும்.
4. கடைசியாக கறிவேப்பிலையை கறகரப்பாக ஆகும் வரை வறுக்கவும்.
5. எல்லாவற்றையும் ஆறவிட்டு, மிக்ஸரில் அரைக்கவும்.
6. அரைத்த பொடியில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து கலந்து வையவும்.
7. காற்றுபுகாத பாட்டிலில் சேமிக்கவும்.
பயன்படுத்துவது
1 டம்ளர் ரசத்திற்கு – 1½ டீஸ்பூன் ரசப்பொடி
நெய் ஓரு சொட்டு சேர்த்தால் மணம் அதிகரிக்கும்.
குறிப்புகள்
வறுக்கும் போது பருப்புகள் கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலை நல்லா உலர்ந்திருந்தால் தான் நீண்ட நாள் நன்றாக இருக்கும்.
2–3 மாதம் வாசனையுடன் கெடாமல் இருக்கும்.
No comments:
Post a Comment