உருளைக்கிழங்கு பிரட்டல் 🥔🧅
தேவையான பொருட்கள்:
✍️ உருளைக்கிழங்கு – 3 (சின்ன துண்டுகளாக நறுக்கவும்)
✍️ வெங்காயம் – 2 (நறுக்கப்பட்டது)
✍️ பச்சை மிளகாய் – 2 (நடுவில் கீறியது)
✍️ மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
✍️ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
✍️ மல்லி தூள் – 1 தேக்கரண்டி
✍️ சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
✍️ சிக்கன் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
✍️ பெருங்காயம் தூள் – ஒரு சிட்டிகை
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
✍️ கறிவேப்பிலை – சிறிதளவு
✍️ கொத்தமல்லி – அலங்கரிக்க
⸻
செய்முறை:
✍️ கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள் போடவும்.
✍️ வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
✍️ இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத் தூள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
✍️ நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.
✍️ சிறிதளவு தண்ணீர் தூவி, மூடி வைத்து உருளைக்கிழங்கு வெந்துவரை மிதமான தீயில் சமைக்கவும்.
✍️ வெந்ததும் மூடியை திறந்து பிரட்டி நன்றாக வறுக்கவும்.
✍️ மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.
🦋🦋🦋 இது போன்ற தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எனது பக்கத்தினை ஃபாலோ செய்யவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும் நன்றி 🦋🦋🦋🦋
No comments:
Post a Comment