5- வகையான ஹெல்தியான இட்லி செய்வது எப்படி?
---
1) ராகி இட்லி
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து – ½ கப்
உப்பு – தேவைக்கேற்றபடி
செய்முறை:
அரிசி, உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவில் ராகி மாவு, உப்பு சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும்.
---
2) ஓட்ஸ் இட்லி
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
ரவை – ½ கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
உப்பு – தேவைக்கேற்றபடி
இனோ / சோடா – ஒரு சிட்டிகை
செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் பொடியாக்கவும். ரவை, தயிர், உப்பு, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கலக்கவும். கடைசியில் இனோ சேர்த்து உடனே இட்லி ஊற்றி வேகவிடவும்.
---
3) கம்பு இட்லி
தேவையான பொருட்கள்:
கம்பு – 1½ கப்
உளுந்து – ½ கப்
உப்பு – தேவைக்கேற்றபடி
செய்முறை:
கம்பு, உளுந்தை 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க விடவும். புளித்ததும் உப்பு சேர்த்து இட்லி ஊற்றி வேகவிடவும்.
---
4) வெஜிடபிள் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 2 கப்
கேரட் துருவல் – ½ கப்
பீன்ஸ் நறுக்கியது – ¼ கப்
கோஸ் நறுக்கியது – ¼ கப்
உப்பு – தேவைக்கேற்றபடி
செய்முறை:
இட்லி மாவில் காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும்.
---
5) பச்சை பயறு இட்லி
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 1 கப்
அரிசி – ½ கப்
இஞ்சி – சிறிது
உப்பு – தேவைக்கேற்றபடி
செய்முறை:
பச்சை பயறு, அரிசியை 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க விடவும். உப்பு சேர்த்து இட்லி ஊற்றி வேகவிடவும்.
No comments:
Post a Comment