வெண்ணிலா குச்சி ஐஸ்
தேவையான பொருட்கள்
பால் – 2 கப்
சர்க்கரை – ½ கப்
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
பால் கிரீம் / பிரெஷ் கிரீம் – ½ கப்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை காய்ச்சவும்.
2. சிறிது பாலில் கார்ன் ஃப்ளோரை கரைத்து பாலில் சேர்த்து நன்றாக கிளறவும்.
3. சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
4. அடுப்பை அணைத்து ஆறியபின் வெண்ணிலா எசன்ஸ், கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஐஸ் மோல்ட்களில் ஊற்றி குச்சி வைத்து ஃப்ரீசரில் 6–8 மணி நேரம் வைக்கவும்.
6. முழுவதும் உறைந்ததும் எடுத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment