பருப்பு உருண்டை குழம்பு
---
1) பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்
உருண்டைக்கு:
துவரம் பருப்பு – 1 கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 3
சோம்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கறிவேப்பில்லை, உப்பு – தேவைக்கு
குழம்புக்கு:
புளிக்கரை நீர் – 1½ கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பில்லை – தாளிக்க
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
1. பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைக்கவும்.
2. உப்பு, வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
3. குழம்பு பாத்திரத்தில் தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவும்.
4. புளிநீர், உப்பு, மசாலா சேர்த்து கொதிக்கவிட்டு உருண்டை சேர்க்கவும்.
5. 10–12 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment