உருளைக்கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
கடலைமாவு – 1 கப்
அரிசிமாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நீர் – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவைக்கேற்ப
செய்முறை
1. உருளைக்கிழங்கை தோல் உரித்து மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து நீர் ஊற்றி கெட்டியாகி விழும் பதத்திற்கு கரைசல் செய்யவும்.
3. எண்ணெயை காய வைத்து உருளைக்கிழங்கு துண்டுகளை கரைசலில் தோய்த்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
4. எண்ணெய் வடிந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment