WELCOME to Information++

Sunday, August 24, 2025

பனீர் புலாவ் செய்வது எப்படி....


பனீர் புலாவ் செய்வது எப்படி....

தேவையானவை: 

பனீர் - 250 கிராம், உதிரியாக வடித்த சாதம் - 2 கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் தலா - 2, பிரியாணி இலை - ஒன்று, பச்சை மிளகாய் - 4, நெய் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

கடாயில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி -  பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பனீர் துண்டுகளை சதுரமாக வெட்டிச் சேர்க்கவும். கலவை சேர்ந்து வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
விருப்பப்பட்டால், வேக வைத்த பச்சைப் பட்டாணி சேர்க்கலாம்.

#sivaaarthika

No comments:

Post a Comment

பேஸ்புக் ( FB) பயன்படுத்தும் அனைத்து நண்பா்களுக்கான பதிவு..

பேஸ்புக்   ( FB) பயன்படுத்தும் அனைத்து நண்பா்களுக்கான பதிவு..         FBயில் Like, comment ஏன் போட வேண்டும்?...    ஒருவா் எழுதிய...